செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம் - தமிழர்களின் சிந்தனை களம் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, July 25, 2011

    செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

    பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம்.

    ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

    மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

    மாம்பழத்தில்
    ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.இவை
    இருதய நோய்,விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு
    காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக
    வைத்துக்கொள்கிறது.


    மேலும்
    மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.கர்ப்பிணி
    பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும்
    இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து
    மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.


    மேலும்
    வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக
    உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10
    நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன்
    கிடைக்கும்.


    அஜீரண
    பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும்
    இல்லை.வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம்
    அளிப்பதோடு,சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.

    வெப்துனியா
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top