நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி - தமிழர்களின் சிந்தனை களம் நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, July 25, 2011

    நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி

    இந்தியா முழுவதும் தரிசு நிலங்களிலும், ரோடு ஓரங்களிலும் காணப்படும் ஊமத்தைச் செடிகள் பெரிய இலைகளுடன், புனல் வடிவ மலர்களை கொண்டவை. முட்டை வடிவில் காணப்படும் கனிகள் முட்களால் மூடப்பட்டிருக்கும். விஷச்செடி என்பதால் ஊமத்தைச் செடியை யாரும் விரும்புவதில்லை. இது நச்சுத்தன்மை பொருந்தியது என்றாலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

    ஊமத்தைச் செடியில் இரண்டு வகை உண்டு. ஒருவகை ஊமத்தம் செடி யின் இலைக் காம்பு இலை நரம்பு ஆகியவை பச்சை வண்ணத்திலும் மற்றொரு வகையான கரு ஊமத்தம் செடிஊதா வண்ணத்தில் அதாவது வயலெட் வண்ணத்தில்இருக்கும்.

    செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

    இத்தாவரத்தின் சக்தி மிகுந்த ஆல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், ஸ்டிராய்டல், லேக்டோன்கள், வித்தனோலைடுகள், கௌமரைன்கள் மற்றும் டேனின்கள் உள்ளன. இச்செடியில் இருந்து ஹயோஸ்கைமைன், ஹயோஸசின்,டாடுரின், ஆகிய அல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை அட்ரோபா பெல்லடோனா தாவரத்தில் உள்ளது போல பிரித்தெடுக்கப்படுகின்றன.

    உடைந்த எலும்பை ஒன்றாக்கும்

    ஊமத்தைச் செடியின் இலைகள், வேர் மற்றும் விதைகள் மருந்தாக பயன்படுகின்றன. இலைகள் வலிபோக்குவன; கிருமிகளுக்கு எதிரானது. தலை அரிப்பை போக்குவது, போதை தருவது. பூக்கள் ஆஸ்துமாவிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.

    கரு ஊமத்தைச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து சாறெடுத்து சாற்றுக்கு சம அளவில் பச்சைக் கற்பூரம், சம அளவு பசுவெண்ணெய் ஆகியவை கலந்து வைத்துகோள்ளவேண்டும். கால் கைகளில் அடிபட்டு வீக்கம், சுளுக்கு, தசைப் பிடிப்பு இவற்றின் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும். உடைந்த எலும்பு ஒன்றுசேரும்.

    வெறிநாய்க் கடிக்கு மருந்து

    இந்திய மருத்துவத்தில் இது அபினுக்கு மாற்றாக பயன்படுகிறது. இலையின் சாறு கோனேரியாவுக்கு தயிருடன் கலந்து தரப்படுகிறது. வெறிநாய்க்கடியான ஹைட்ரோஃபோபியாவிற்கும் மருந்தாகிறது.

    விதைகள் மற்றும் வேர் வயிற்றுப் போக்கு தடுப்பது; காய்ச்சல் போக்கும். கிருமிகளுக்கு எதிரானது. தோல் வியாதிகளை குணமாக்கும்.

    விதைகளுக்கு கூடுதலான போதை தரும் சக்தி உள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top