ஞாபகசக்தியைக் கூட்டவேண்டுமா? நடவுங்கள்... - தமிழர்களின் சிந்தனை களம் ஞாபகசக்தியைக் கூட்டவேண்டுமா? நடவுங்கள்... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, July 16, 2011

    ஞாபகசக்தியைக் கூட்டவேண்டுமா? நடவுங்கள்...


    Posted Imageநடப்பதால் மூளையின் ஞாபகசக்திக்கு பொறுப்பாகவுள்ள பகுதி தூண்டப்பட்டு ஞாபகசக்தி பெருக வாய்ப்புண்டு என்று புதிய ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டுள்ளது.

    வயது செல்லச்செல்ல நரம்புக்கலங்கள் படிப்படியாக இறக்கின்றன, இதுவே வயதானவர்களில் ஞாபகசக்தி குன்றுவதற்கான காரணங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. முதிர்ச்சியடைந்த ஒருவரின் மூளையின் நரம்புகள் மேலும் வளர்ச்சி அடைவதில்லை என்றே இற்றைவரைக்கும் ஆய்வாளர்களால் நம்பப்பட்டு வந்தது, ஆனால் சி.டி ஸ்கான் போன்ற படரீதியான படிப்புகளால் அது பிழை என அறியப்பட்டது. இரண்டு இடங்களில் நரம்பு வளர்ச்சி மிக்க செயற்பாடானதாக இருப்பதை அறிவியலாளர்கள் அறிந்துள்ளனர்: ஒன்று மணநுகர்ச்சிப் பகுதி மற்றையது ஞாபகசக்திக்குப் பொறுப்பான கிப்போகம்பசின் ஒருபகுதி.

    ஆராய்ச்சியில், எந்தவித செயற்பாடும் இல்லாத வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கும் 120 முதியோர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் அரைவாசிப்பேர் எழுந்தமானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருநாளிற்கு 40 நிமிடப்படி வாரத்தில் மூன்று நாட்களுக்கு நடக்கவிடப்பட்டனர், இது ஒரு வருடம் நடைபெற்றது. ஏனையோர் அதே கால வேளையில் சிறிதான நீட்டல் உடற்பயிற்சிகளைச் செய்தனர். ஒருவருட காலத்தின் பின்னர் நடந்தவர்களின் கிப்போகம்பசில் 2% வளர்ச்சி தென்பட்டது, மற்றைய பகுதியினரிடம் பெரும்பாலும் 1% வளர்ச்சி குன்றிக் காணப்பட்டது.

    நடை போன்ற உடற்பயிற்சிகள் எலும்புகளுக்கு அல்லது தசைகளுக்கு குருதியோட்டத்தை அதிகரிப்பது மட்டுமில்லாது புதிய நரம்புக்கலங்கள் வளர்வதையும் தூண்டுகிறது என்பதற்கு இந்த ஆய்வு சிறந்ததொரு சான்றாக உள்ளது.

    எப்படி உடற்பயிற்சிமூலம் இது நிகழ்கின்றது என்பது இன்னமும் தெரியாவிடினும் குருதியோட்டம் அதிகரிப்பதால் நரம்புக்கலங்களுக்குரிய போசாக்கு தாரளாமாகக் கிடைப்பது ஒரு காரணியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. உடற்பயிற்சி மேலும் சில வளரூக்கிகளையும் (ஹோர்மோன்) மூளை வேதியவினை பொருட்களையும் அதிகரிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது, இதனால் புதிதாக உருவாகிய நரம்புக்கலங்களுக்கு சிறந்ததொரு ஊடகம் கிடைக்கின்றது.

    “உடற்பயிற்சி சிறந்ததொரு மருந்து” என இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட கிராமர் என்பவர் தெரிவித்தார். வாகனங்கள் இல்லாத அக்காலத்தில் மனிதர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நடந்தே சென்றனர்; சிறப்புடன் வாழ்ந்தனர்.

    “தம்பி உந்தத் திறப்பு எங்கேயோ வைச்சு விட்டன்..வர வர மறதியாக இருக்கு...” என்று சொல்லும் ஒருவரைப்பார்த்து இப்போது நீங்கள் கூறலாம் “ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நடந்து செல்லுங்கோ..
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஞாபகசக்தியைக் கூட்டவேண்டுமா? நடவுங்கள்... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top