பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படும் இருஃபினோல் A (BPA) மனித விந்தணு உற்பத்தியைக் குறைக்கிறது - தமிழர்களின் சிந்தனை களம் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படும் இருஃபினோல் A (BPA) மனித விந்தணு உற்பத்தியைக் குறைக்கிறது - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, July 16, 2011

    பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படும் இருஃபினோல் A (BPA) மனித விந்தணு உற்பத்தியைக் குறைக்கிறது

    நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களில் காணப்படும் இருஃபினோல் A (BPA) மனித விந்தணு உற்பத்தியைக் குறைக்கிறது

    Posted Image

    பல
    காபனேற்று நெகிழிகளை (polycarbonate plastic , பாலிகார்பனேட் பிளாஸ்டிக்) அல்லது இப்பாக்சிப் பிசின்களைத் (epoxy resins) தயாரிக்கப் பயன்படுத்தும் வேதிப்பொருட்களில் ஒன்றாக இருஃபினோல் A (பிஸ்ஃபினோல் A, Bisphenol A) அல்லது BPA என்று அழைக்கப்படும் கரிமச் சேர்மம் விளங்குகிறது. (1)

    BPA அடங்கியுள்ள பலகாபனேற்று நெகிழிகள் கொண்டே பெரும்பாலான புட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அன்றாடம் அருந்தும் கனிம நீர், கொக்கோகோலா போன்ற பானங்கள், குழந்தைகளுக்கான புட்டிப்பால் உட்பட உணவைப் பொதிசெய்தல் போன்ற பல்வேறுவகைத் தேவைகளுக்கு இவ்வகை நெகிழிகள் (பிளாஸ்டிக்) பயன்படுத்தப்படுகின்றன; இவை தவிர இவற்றின் பயன்பாடு குறுவட்டு, இறுவட்டு (CD,DVD) போன்றவற்றிலும் மின்சார, மின்னணு உபகரணங்களிலும் மேலும் பல உற்பத்திப் பொருட்களிலும் உள்ளன. (2)

    இவ்வகையான பயன்பாடுகள் இருந்தும் இதனை உபயோகிப்பது தீங்கான விளைவுகளைத் தரலாம் என்று பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. சமீபத்தில் (அக்டோபர் 2010) வெளியாகிய ஆய்வு முடிவொன்றில் தொடர்ச்சியான BPAயின் வெளிப்பாடு (எ.கா: ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக் புட்டியில் நீர் அருந்துதல்) மனித விந்து உற்பத்தியைக் குறைக்கும் என அறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன் விளைவுகளாக இதய நோய்கள், புற்றுநோய்கள், பிறப்புக் குறைபாடுகள், நீரிழிவு, ஆண்மை இழப்பு என்பன அறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (3) (4) (5)




    Posted Image

    மனிதர்களில் BPA யை மையமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஐந்து வருட ஆய்வில் சீனாவில் உள்ள 218 எண்ணிக்கையிலான தொழிற்சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். (6) (3) இவர்களில் சிலர் BPA அடங்கியுள்ள பொருட்களில் நீர் அருந்த, உணவு உட்கொள்ள ஏனையோர் இந்த வேதிப்பொருளின் நேரடித் தொடுகை இல்லாது இருந்து வந்தனர். இவர்களது சிறுநீர், சுக்கிலநீர் (விந்துநீர்) ஆகியவற்றில் உள்ள BPAயின் அளவு ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. இதன்படி BPA அடங்கிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியோருக்கு சாதரணமானவர்களை விட நான்கு மடங்கு விந்தின் எண்ணிக்கை குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டது. டீ-குன்-லீ என்பவர் தலைமை தாங்கிய இந்த ஆய்வின் பெறுபேறுகள் 28ம் திகதி அக்டோபர் மாதம் கருத்தரிப்பும் மலட்டுத்தன்மையும் (Fertility and Sterility) எனும் பனுவலில் வெளியிடப்பட்டது.

    இருஃபினோல் A (BPA) ஒரு நச்சுப்பொருள் என்று செப்டம்பர் 2010இல் கனடா முதன்முதலில் அறிக்கை வெளியிட்டது. (1) இருஃபினோல் A அகஞ்சுரப்பிகளின் தொழிற்பாட்டைக் குழப்பி உடலின் வளரூக்கிகளாகத் (ஒமோன்களாக) தொழிற்படுவதன் மூலம் பாரிய உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தவல்லது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இருஃபினோல் A கொண்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது பல்வேறு ஆபத்துக்களைத் தரலாம்.


    ஆதாரங்கள்
    1. Bisphenol A. Wikipedia, the free encyclopedia. [Online] http://en.wikipedia....ki/Bisphenol_A.

    2. About Bisphenol A. Bisphenol A. [Online] http://www.bisphenol...out/index.html.

    3. Harmon, Katherine. Everyday BPA Exposure Decreases Human Semen Quality. Scientific American. [Online] http://www.scientifi...-semen-quality.

    4. Doyle, Keith. Baby bottle chemical is removed . BBC News . [Online] http://news.bbc.co.u...ws/7943200.stm.

    5. Sokol, Dr. Rebecca. Study links BPA in Plastics to Male Sexual Dysfunction. Vitals Blog. [Online] http://spotlight.vit...l-dysfunction/.

    6. BPA chemical in plastics may be linked to low sperm counts. NYDailyNews.com. [Online] http://www.nydailyne...rm_counts.html.

    7. Catharine Paddock, PhD. BPA Now Linked To Poor Sperm. medicalnewstoday. [Online] http://www.medicalne...les/206102.php.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படும் இருஃபினோல் A (BPA) மனித விந்தணு உற்பத்தியைக் குறைக்கிறது Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top